தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் மெத்தனால் கலந்த போதைப்பொருள் அருந்தியதால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது ஆஸ்திரேலிய யுவதியும் உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்து வைத்தியசாலையில் தனது மகள் இறந்துவிட்டார் என்பதை அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
19 வயதான ஹோலி பவுல்ஸ் என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மெல்பேர்ணைச் சேர்ந்த இரு யுவதிகள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மெத்தனால் கலந்த மது அருந்திய நிலையில் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதன்கிழமை அதிகாலை இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
19 வயதான பியாக்கோ ஜோன்ஸ் என்ற யுவதி இரு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரின் நண்பி நேற்று உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்து, லாவோஸில் மெத்தனால் கலந்த மது அருந்தியதால் இதுவரையில் ஆறு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.