வடக்கு குயின்ஸ்லாந்து, டவுன்ஸ்வில்லியில் பொலிஸ் காரிலிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், களவாடப்பட்ட ஆயுதங்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலைவேளையிலேயே பாதுகாப்பான அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகன தரிப்பிடத்துக்குள் நுழைந்த கும்பல், அங்கிருந்த பொலிஸ் கார் உட்பட ஐந்து வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது. பின்னர் பொலிஸ் காருக்குள் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எடுத்துக்கொண்டு அக்குழு தப்பிச்சென்றுள்ளது.
இதனையடுத்து டவுன்ஸ்வில் முழுவதும் தேடுதல் வேட்டை இடம்பெற்றது. இதன்பிரகாரம் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வர்மீதும் 48 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.