சிட்னியை சேர்ந்த தந்தையும், மகனும் தபால்மூலம் போதைப்பொருள் இறக்குமதி செய்துள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்தே இவர்கள் போதைப்பொருளை இறக்குமதி செய்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
4.5 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் பெடரல் பொலிஸார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன்பிரகாரம் சிட்னி வடமேற்கு பகுதியில் நவம்பர் 11 ஆம் திகதி இரு வீடுகளில் பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதனையடுத்து 54 வயதான தந்தையும், 25 வயதான மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.