பூர்வக்குடி அமைப்புகளிடமிருந்து சுமார் ஒரு மில்லியன் டொலர்கள்வரை மோசடி செய்தார் எனக் கூறப்படும் பூர்வக்குடி தலைவர் ஒருவருக்கு ஆறு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
72 வயதான ஜெப் கிளார்க் என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பூர்வக்குடி ஆணையகத்தின் தலைவராக செயற்பட்ட இவர் 2001 மற்றும் 2015 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு பூர்வக்குடி அமைப்புகளிடமிருந்து 922,214 டொலர்கள்வரை மோசடி செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட அவர் செப்டம்பர் 11 ஆம் திகதி முதல் காவலில் வைக்கப்பட்டிருந்தார். மூன்றாண்டுகளுக்கு பிறகு அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும்.