சிட்னி கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கு எதிராக நாசகார செயலில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் 2ஆவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 21 ஆம் திகதி நள்ளிரவு வேளை, வாகனமொன்று கொளுத்தப்பட்டதுடன், மேலும் சில வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. யூத எதிர்ப்பு கோஷங்களும் எழுதப்பட்டிருந்தன.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கினர். 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.
இந்நிலையிலேயே 19 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சொத்து அழிப்பு உட்பட 21 குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.