விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் காலத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்துவருகன்றது பதிவாகியுள்ளதாக கூறும் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் கிளேர் லுக்கர் , குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.
நவம்பர் 26 ஆம் திகதியுடன் முடிவடைந்த கோவிட் கண்காணிப்பு அறிக்கையில், விக்ரோரியா மாநிலத்தின் சுகாதாரத் துறையானது கோவிட் நோயால் மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் ஒரு வார சராசரி இப்போது 197 ஆக உள்ளது, இது அக்டோபரில் இதே காலகட்டத்தை விட 59 சதவீதம் அதிகமாகும்.
மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல், குளிர் மற்றும் வியர்வை ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
சிலருக்கு தலைவலி, தசை வலி, சோர்வு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, வாசனை மற்றும் சுவை இழப்பு மற்றும் பசியின்மை போன்றவையும் ஏற்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபா.தயாபரன்.