பேர்த்திலுள்ள வீட்டில் தனது தாயை கொடூரமாக குத்தி கொலை செய்த மகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆகஸ்ட் 10 ஆம் திகதியே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகளவான போதைப்பொருளை உட்கொண்டிருந்த நிலையிலேயே தனது தாயை 27 வயது மகன், இவ்வாறு கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
தாய்மீது 62 தடவைகள் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவருக்கு இன்று 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2040 ஆம் ஆண்டிலேயே அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும்.