சிட்னி மேற்கு பகுதியிலுள்ள கடையொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
60 வயது மதிக்கத்தக்க ஆணொருவரும், பெண்ணுமே இன்று காலை இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
இரு தசாப்தங்களாக இந்த ஜோடி கடையொன்றை நடத்திவந்துள்ளனர் எனவும், சமூகத்துக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருவரினதும் உடல்களில் காயங்கள் காணப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது. சந்தேகத்துக்கிடமான மரணமாக பொலிஸாரால் கருதப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.