ஆஸ்திரேலிய மத்திய வங்கி , ரொக்க வட்டி வீதத்தை 4.35 சதவீதமாக தக்கவைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் கடைசி கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற நிலையில், ரொக்க வட்டி வீதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதிருக்கும் முடிவு இன்று எடுக்கப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் மாதம் முதல் ரொக்க வட்டி வீதம் 4.35 சதவீதமாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஆஸ்திரேலிய பொருளாதார வளர்ச்சி வீதமும் மந்த கதியில் உள்ளது.