விக்டோரியாவிலுள்ள யூத சமூக மையத்துக்கு ஒன்லைன்மூலம் மிரட்டல் விடுத்தார் எனக் கூறப்படும் நபரொருவர் குயின்ஸ்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
52 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலன்ட் பார்க் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
மெல்பேர்ண் யூத வழிபாட்டு தலம்மீது மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு தாக்குதலுடன் குறித்த நபருக்கு தொடர்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.