சிட்னியில் சர்வதேச சட்டவிரோத பணப்பரிமாற்றத்துடன் தொடர்புடையதாக நான்கு பேரை நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சுமார் 8 மில்லியன் டொலரையும் கைப்பற்றியுள்ளனர்.
ஒரே தடவையில் இவ்வளவு பெருந்தொகைப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளமை பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்பணம் ஆசியாவுக்கு போதைவஸ்து கடத்துவதன் ஊடாக பெறப்பட்ட பணமா அல்லது சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தை நடத்த திட்டமிட்டனரா போன்ற கோணங்களில் என பொலிஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் சிட்னியிலுள்ள ஒரு வீட்டிலிருந்து 7.8 மில்லியன் டொலர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 5 மில்லியன் காரொன்றின் டிக்கியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த பணத்துடன் தொடர்பு பட்ட 3.1 மில்லியன் இன்னொரு இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த பணத்துடன் தொடர்பு பட்ட 3.1 மில்லியன் மற்றுமொரு இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றத்தடுப்பு பிரிவுத்தளபதி ஸ்டியுவார்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார். மொத்தமாக 8 மில்லியனுக்கு அதிகமான தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சிறியளவிலான போதை வஸ்துவும் ஆங்காங்கே மீட்கப்பட்டுள்ளது. மொத்தமாக 8 மில்லியனுக்கு அதிகமான தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சிறியளவிலான போதை வஸ்துவும் ஆங்காங்கே மீட்கப்பட்டுள்ளது. 27 வயது பெண் ஒருவர் ஒரு அவுன்ஸ் amphetamine ஐ மலகூடத்தினுள் போட முயற்சித்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் போதைவஸ்து கடத்தல் விநியோகம் போன்றவற்றுடன் தொடர்புடையதாகவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் சட்டவிரோத பணபரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளனர் என ஸ்மித் தெரிவித்துள்ளார். 32 வயதான சிட்னியில் கசினோவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவருக்கும் இந்த பணத்துடன் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
இந்த நபர் தடை செய்யப்பட்ட ஸ்டார் காசினோவை நடத்தியவர் இந்தப்பணம் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகள் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளன. இவர்களில் இருவர் சிட்னியில் இயங்கும் ஆசிய சட்டவிரோத குழுவுடன் தொடர்பு பட்டவர்கள் மற்ற இருவரும் ஹொங்கொங்குடன் தொடர்பு பட்டவர்கள். இந்த சம்பவத்துடன் தொடபுடைய மேலும் பலர் கைதாகலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்