ஜனவரி 31 ஆம் திகதி ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்கள் மீண்டும் வகுப்புகளைத் தொடங்குவதற்கு முன், மாநிலம் முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களுக்கு 6.6 மில்லியன் அன்டியன் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டன என என்று மாநில பிரிமீயர் டனீயல் அன்ரூஸ் தெரிவித்தார். அத்துடன் மேலும் 14 மில்லியன் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விக்டோரிய மாநிலத்தில் பாடசாலைகளுக்கு மாணவர்களை மீளழைக்கும் திட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாரத்திற்கு இரண்டு முறை விரைவான அண்டியன் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி பெற்றுக்n;காள்வது கட்டாயமாக்கப்படவுள்ளது.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ” முடிந்தவரை தொற்றுப்ரவலைக் கண்டுபிடித்து, அந்த தொற்றுத் தொடராமல் இருக்க முயற்சிக்கிறோம். பெற்றோர்கள், பரிசோதனைகருவிகளை பாடசாலைகளில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாடசாலை அல்லது குழந்தை பராமரிப்பு நிலையம் செல்ல முன்னர் வீட்டில் ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ” – என்றார் மாநில பிரிமியர் டானியல் அன்ரூஸ்.
.