ஆஸ்திரேலிய தினம் “ஆக்கிரமிப்பு நாள்” எனப் பிரகடனப்படுத்தி பூர்வக்குடி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்னியில் ஆஸ்திரேலிய தினத்தையொட்டி, தேசிய விடுமுறையின் திகதியை மாற்றக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கி பேரணி நடத்தினர்.

பூர்வக்குடி மக்கள் ஜனவரி 26 ஆம் திகதியை ‘துக்க நாள்’ அல்லது ‘உயிர்வாழ்தலுக்கான நாள்’ என்றே எண்ணுகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தே மக்கள் நாடுமுழுவதும் பேரணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், கோவிட்-19 காரணமாக மெல்பேர்ணில் நடந்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் மெல்பேர்ணில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்கள் வந்து திரும்பிச்சென்றதை காண முடிகிறது.

இதேவேளை மெல்பேர்ண் சென்கில்டாவில் அமைந்துள்ள நிறுவப்பட்டிருந்த கப்டன் குக் இன் சிலை மீது அடையாளம் தெரியாதவர்கள் சிவப்பு நிற பெயின்டை ஊற்றி தமது எதிப்பை வெளியிட்டனர்.சிசிரிவிகளின் உதவியுடன் குற்றவாளிகளை பொலிஸார் கண்டுபிடிப்பர் என தெரிவிக்க்பட்டது.

கப்டன் குக் என்பவர் தான் ஆஸ்திரேலியாவுக்குள் முதல் வந்த கப்பலின் கப்டன். இதன் பின்னர் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்திலிருந்து பூர்வக்குடியின மக்களை வெளியேற்ற வழிவகுத்தது.
ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலிய தினத்தின் திகதியை மாற்றுவதற்கான கோரிக்கை வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.