சிட்னி, கிலன்மோர் பார்க் பிரேதேசத்தில் மதுபோதையில் காரை ஒட்டிச்சென்ற பெண்ணொருவர் அப்பகுதியில் உள்ள வீட்டின் படுக்கையறையை இடித்துதள்ளிய சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
“இந்தியாவில் எனது மனைவியுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டது – நான் பார்த்தேன் எனக்கருகில் கார் ஒன்று நின்றது. எனக்கும் காருக்கும் இடையில் சிறிய இடைவெளிகளே இருந்தன. இச்சம்பவம் இன்னொரு 10 நிமிடங்களுக்குப் பின்னர் நடந்திருந்தால், நான் தூங்கிக்கொண்டிருப்பேன், நிச்சயமாக கார் என் உடலுக்கு மேலாக இருந்திருக்கும்.”- என்று படுக்கறையிலிருந்து உயிர் தப்பிய இந்திய இளைஞர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரிடம் பொலிஸாருடன் பேச முயன்றபோது அவர் அதிகாரிகளுடன் கடுமையாக தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார் எனவும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க மறுத்தார் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது – பொலிஸ் அதிகாரியை எதிர்த்தது உள்ளிட்ட ஐந்து குற்றங்கள் குறித்த பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டதேவேளை அவருக்கு எதிரான வழக்கு அடுத்தமாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.