உக்ரைனில் போர் மூண்டால் தனது படைகளை அனுப்ப மாட்டாது என அவுஸ்திரேலிய நிதி அமைச்சர் Simon Birminghamதெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தனது கிழக்கு எல்லைக்கு தரைப்படை, விமானப்படை,கடற்படை என்பவற்றை அனுப்ப உள்ளது. அமெரிக்காவும் சிறிய எண்ணிக்கையிலான படையை அனுப்புவதாக உத்தரவாதமளித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் எல்லையிலிருந்து படையை மீளப் பெற்று விட்டு இராஜதந்திரரீதியிலான பேச்சுக்களில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் ஐப்ரோப்பிய நாடுகளுடனும் உக்ரைனுடனும் நெருக்கமான தொடர்பில் உள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் உக்ரைனுக்கு தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதுவர் மேற்கு நாடுகள் உக்ரைனை ஆக்கிரமிக்கப்பார்க்கினறன என கூறியிருந்ததற்கு உக்ரைன் இராஜதந்திரி இந்தக்கூற்று பொய்யானது என கூறியிருந்தார்; இவர்களுடைய கருத்துக்கள் தொடர்பாக நிதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதே வேளை உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா தனது துருப்புகளை வாபஸ் பெற வேண்டுமெனவும் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளையிட்டு தாங்கள் வெட்கப்படப்போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா ஏற்கனவே 2014,15ம் ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு எதிராக சில தடைகளை விதித்திருந்தது இவற்றை விரிவு படுத்த வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ரஷ்யா 100,000 துருப்புகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தியுள்ளதாக மேற்கு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.