சிட்னி தெற்கிலுள்ள யூத வழிபாட்டு தலம் இனந்தெரியாத குழுக்களால் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸாரால் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
வழிபாட்டு தல சுவர்களில் நாஜி சின்னங்கள் வரையப்பட்டுள்ளதுடன், யூத எதிர்ப்பு கோஷங்களும் எழுதப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸி, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
பன்முக கலாசாரம் கொண்ட ஆஸ்திரேலியாவில் இப்படியான வெறுக்கத்தக்க சம்பவங்களுக்கு இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சம்பவம் தமது சமூகத்தை சீற்றமடைய வைத்துள்ளது என நியூ சவூத் வேல்ஸ் யூத சமூகம் தெரிவித்துள்ளது.