பிரிஸ்பேன் தெற்கு பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற மோதலின்போது பொலிஸ் அதிகாரி ஒருவரும், நபரொருவரும் காயம் அடைந்துள்ளனர்.
இருவரும் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
அன்னெர்லி, தாமர் வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் மோதல் ஏற்பட்டுள்ளது என்று குயின்ஸ்லாந்து பொலிஸாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
அவ்வேளை பொலிஸ் அதிகாரியை, ஆணொருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.