சிட்னியில் யூத வழிபாட்டுத் தலம் மற்றும் வீடொன்றுமீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
சிட்னி தெற்கு பகுதியிலுள்ள யூத வழிபாட்டு தலம்மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இன்று மற்றுமொரு வழிபாட்டு தலமும் குறிவைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்றனர். வழிபாட்டு தலத்தின் பாதுகாப்பு வேலியில் வெறுப்பை தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல வீடொன்றின் முன்னால் தகாத வார்த்தை பிரயோகம் எழுதப்பட்டுள்ளது. யூதர்களை விமர்சிக்கும் வகையிலேயே இவ்வாறான செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேற்படி இரு சம்பவங்களையும் மாநில பிரீமியர் கண்டித்துள்ளார்.