நியூ சவூத் வேல்ஸ் மாநில அரசியல்வாதியொருவரின் விளம்பர படத்தில் நாஜி சின்னங்கள் வரையப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
சிட்னிக்கு மேற்கே சுமார் 260 கிலோ மீற்றர் தொலைவில் ஆரஞ்சில் உள்ள நேஷனல்ஸ் வேட்பாளர் காலேர் சாம் பாராவேயின் விளம்பரப் பலகையிலேயே இந்த நாசகார செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று காலேர் சாம் வலியுறுத்தியுள்ளார். தீவிரவாத அரசியல் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிட்னி மற்றும் மெல்பேர்ணில் யூத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. குழந்தை பராமரிப்பு நிலையமொன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.