சிட்னி மேற்கிலுள்ள ஜெப ஆலயம்மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
37 வயதான குறித்த நபர் Pyrmont பகுதியிலுள்ள ஹோட்டலில் வைத்து இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 11 ஆம் திகதியே தேவாலயம்மீது தாக்குதல் நடத்தப்பட்டு, யூத எதிர்ப்பு வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 33 வயது நபரொருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். பெப்ரவரி மாதம் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 2 ஆவது சந்தேக நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.