தனது பராமரிப்பில் இருந்த சிறுவன் ஒருவரை கொலை செய்தார் எனக் கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டவுன்ஸ்வில் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆயுதத்தால் தலைப்பகுதியில் தாக்கப்பட்டதில் இச்சிறுவன் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. எவ்வாறான ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பன பற்றி விசாரணை நடத்தும் பொலிஸார், மரண பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணை, நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.