சிட்னி மேற்கிலுள்ள நியூ சவூத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹேலனின் தேர்தல் அலுவலகத்தை சேதப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலுவலகம் முழுவதும் ஸ்ப்ரே பெயிண்டால் எழுதப்பட்டிருந்தது.
' மத சுதந்திரத்தைக் கோருவது பிரிவினை கிடையாது, அது கடவுளுக்கான கடமை" என எழுதப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 56 வயது நபரொருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொலிஸ் காவலில் உள்ள அவர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
இதற்கு முன்னரும் குறித்த அலுவலகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் இற்றைவரை ஐந்து தடவைகள் தாக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.