ஆஸ்திரேலியாவுக்குள் 139 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடத்திய இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களுக்கே தெற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றத்தால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேர்த் வழியாக அடிலெய்டுக்கு சரக்கு கப்பலில், சொகுசு பஸ்களுக்குள் மறைத்தே குறித்த போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகள் இவற்றை கைப்பற்றிய பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இன்று சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.