நாட்டின் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தான் நம்பவில்லை என்று ஆஸ்திரேலிய உளவுத்துறையின் தலைவரான மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தும் நோக்கில் சிட்னியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பட்டுவருகின்றன.
இந்நிலையிலேயே உளவுத்துறை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வந்தாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை மாற்றுவதற்குரிய தேவை எழவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.