அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் வர்த்தகப் போரை முன்னெடுத்துவரும் நிலையில், ஆஸ்திரேலிய பிரதி பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இவ்வாரம் வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவரது பயணம் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து இரு தரப்பு பேச்சுகளில் பாதுகாப்பு அமைச்சர் ஈடுபடவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தோ, பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.