நியூ சவூத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹெலன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சுக்குரிய வாகன சாரதியை தனது பிரத்தியேக பயணங்களுக்கு பயன்படுத்திய விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
தனது குழந்தை பயணிப்பதற்கும், வேறு இடங்களுக்கு செல்வதற்கும் இவர் சாரதியை பயன்படுத்தியுள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ருந்தது.
இந்நிலையிலேயே அவர் இன்று அமைச்சு பதவியை துறந்துள்ளார். எனினும், அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை.
தனது செயலுக்காக மக்களிடம் வருத்தம் வெளியிட்டுள்ள அவர், போக்குவரத்துக்குரிய கட்டணங்கள் மீள செலுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.