சீனா உருவாக்கியுள்ள டீப்சீக் ஏஐ செயழிக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதற்கமைய அரச தொடர்பாடல் சாதனங்களில் மேற்படி செயலியை பயன்படுத்த முடியாது என்பதுடன், தரவிறக்கம் செய்யப்பட்டிருப்பின் அவற்றை அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டீப்சீக் செயலி ஆஸ்திரேலிய அரசாங்க தொழில்நுட்பத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்புக்கு முன்னிலை வழங்கியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.
டீப்சீக் செயலி சீன அரசாங்கத்தின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் சுட்டிக்காட்டி இருந்த நிலையிலேயே, இத்தடை அமுலுக்கு வந்துள்ளது.
இத்தடை அரசாங்க நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றபோதிலும் தனியார் துறையினரும் பயன்பாடு பற்றி விழிப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.