சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மெல்பேர்ணை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பின்னரே, அவர் பிணைகோரி விண்ணப்பிக்க முடியும்.
33 வயதான குறித்த இளைஞனுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவற்றை அவர் ஒப்புக்கொண்ட பிறகு விக்டோரிய மாவட்ட நீதிமன்றத்தால் மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஜுன் 23 ஆம் திகதி மேற்படி இளைஞனின் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலுடன் இவர் தொடர்புபட்டவர் என தெரியவந்துள்ளது.