இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உடனான உறவுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு ‘செக்’ வைக்க இவ்விரு நாடுகளுமே சரியான தேர்வு என ட்ரம்ப் நிர்வாகம் கருதுகின்றது.
" சீனாவை திறம்பட எதிர்கொள்வதற்கான ‘முக்கியமான கூட்டாளி’ இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்பதையும் ட்ரம்ப் நிர்வாகம் அங்கீகரித்துள்ளது” என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் முன்னாள் அதிகாரி லிசா கர்டிஸ் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் ஆட்சிக் காலமான 2017 மற்றும் 2021-க்கு இடையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான மூத்த இயக்குநராக பணியாற்றியவர் லிசா கர்டிஸ் என்பதால், அவரது கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ‘குவாட்’ மிகவும் முக்கியமான ஒன்றாகும். குவாட் அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா என்பன அங்கம் வகிக்கின்றன.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் வாஷிங்டன் சென்று, முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தியுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.