விக்டோரியா வடமேற்கு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆணொருவர் பலியாகியுள்ளார்.
இரு குழந்தைகள் உட்பட நால்வர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று முற்பகல்வேளையிலேயே குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு போராடினர்.
சம்பவ இடத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
30 மற்றும் 70 வயதுடைய இரு பெண்களும், இரு குழந்தைகளும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்.