சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல்பகுதியில் ஆஸ்திரேலிய இராணுவ கண்காணிப்பு விமானத்தை அச்சுறுத்தும் விதத்தில் சீன போர் விமானம் செயல்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
ஆஸ்திரேலியாவின் குறித்த கண்காணிப்பு விமானத்துக்கு முன், சீன போர் விமானம் தீப் பொறிகளை வெளியிட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஆஸ்திரேலிய படையினருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. விமானமும் சேதமாகவில்லை.
எனினும், இந்த செயல் தொடர்பில் கன்பரா தரப்பில் இருந்து பீஜிங்கிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
சீன உட்பட அனைத்து நாடுகளும் தமது இராணுவத்தை பாதுகாப்பான தொழில்முறைமையின்கீழ் இயக்க வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நெறிமுறைகளுக்கு அமையவே ஆஸ்திரேலியா அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் ஆஸ்திரேலிய வடகிழக்கு கடற்பகுதியில் உள்ள மூன்று சீன போர்க்கப்பல்கள் பாதுகாப்பு தரப்பால் கண்காணிக்கப்படுகின்றன.