AustraliaCommunityNorthern Territory

NT , Alice Springs இல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு!

Northern Territory இல் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து Alice Springs பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு இருவார காலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை NT முதலமைச்சர் Eva Lawle இன்று வெளியிட்டுள்ளார்.

“ இரு வாரங்களுக்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை இளைஞர்கள் வெளியே தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.” – எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

சுமார் 33 ஆயிரம் பேர் வாழும் குறித்த பகுதிக்கு கூடுதல் பொலிஸார் அனுப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர் ஒருவரின் மரண சம்பவத்தை அடிப்படையாக வைத்தே நேற்று வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Back to top button