கூட்டாட்சி தேர்தல் தொடர்பில் நாளை விடுக்கவிருந்த அறிவிப்பை பிரதமர் அந்தோனி அல்பானீஸி கைவிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
வெப்பமண்டல சூறாவளியான ஆல்பிரட் குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவூத் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் நாளை கரையைக் கடக்கவுள்ளது.
இதனால் அடை மழை மற்றும் வெள்ள பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான வீடுகள் சேதமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தேர்தல் திகதியை அறிவிக்கும் திட்டத்தை பிரதமர் கைவிட்டுள்ளார்.
மே 17 ஆம் திகதிக்கு முன்னர் கூட்டாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி தேர்தலை நடத்தும் அறிவிப்பை நாளை வெளியிடுவதற்கு பிரதமர் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஆஸ்திரேலிய தேர்தல் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் லேபர் கட்சியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனினும், வெற்றி கொண்டாட்டத்துக்காக பேர்த்துக்கு செல்லும் திட்டத்தையும் பிரதமர் ஒத்திவைத்துள்ளார்.
' வாக்குகளைவிட ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கையே எனக்கு முக்கியம்." என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.