விக்டோரியா மாநிலத்தில் பூர்வக்குடி மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் வீதம் மும்மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் 27 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2020 மற்றும் 2024 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தற்கொலை செய்துகொண்ட பூர்வக்குடி மக்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
எனவே, பூர்வக்குடி மக்கள் தற்கொலை செய்துகொள்வதிலிருந்து தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது என பூர்வக்குடி மக்கள் தொடர்பான அறிக்கையொன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெருமளவானோர் உளரீதியாக பாதிக்கப்பட்ட பின்னரே தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர் என தெரியவந்துள்ளது.