இந்தோனேசியாவில் 'ஸ்பா" நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்திசென்ற ஆஸ்திரேலிய தம்பதியினருக்கு ஏழு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நடத்திவந்த ஸ்பா நிலையம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதனையடுத்தே மெல்பேர்ண் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவில் விபசார தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது ஸ்பா நிலையம் இருபாலின விபசார விடுதியாக செயல்பட்டது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்தே பாலி நீதிமன்றத்தால் இன்று ஏழு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.