கன்பரா முழுவதும் வாகனக் கொள்ளையில் ஈடுபட்டுவந்த இளைஞர் கும்பலைச் சேர்ந்த எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் வாகனங்கள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 196 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இவற்றில் பல சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அறுவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 16 வயது சிறுவன் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.