ஆல்பிரட் வெப்பமண்டல சூறாவளியால் ஆஸ்திரேலியாவின் கரையோரப்பகுதிகளில் அடை மழையுடன் கடும் காற்று வீசிவருகின்றது.
இதனால் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவூத் வேல்ஸ் மாநிலங்களில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மின்சாரம் இன்றி பரிதவிக்கின்றனர்.
தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் ஆல்பிரட் சூறாவளி இன்று கரையைக் கடந்தாலும், நாளைவரை அனர்த்த எச்சரிக்கை நீடிக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு நியூ சவூத் வேல்ஸில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேற்றிரவு வெளியேற்றப்பட்டன.
அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் ஏற்கனவே மேற்கொண்டிருந்தன.