ஆல்பிரட் வெப்பமண்டல சூறாவளியால் தென்கிழக்கு குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவூத் வேல்ஸில் 800 மில்லி மீற்றர்வரை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணிநேரத்துக்குரிய வானிலை எச்சரிக்கையே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளது. சூறாவளியின் தாக்கம் சனிக்கிழமைவரை இருக்குமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அடை மழையால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றால் மரங்களும் முறிந்துவிழுந்துள்ளன.
சூறாவளி எச்சரிக்கையால் இவ்விரு மாநிலங்களிலும் அச்சுறுத்தல் பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மீள திறப்பு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமையே அறிவிப்பு வெளியாகும். மின்சார துண்டிப்பதால் வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.