AustraliaCommunity

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் சடலமாக மீட்பு

மேற்கு சிட்னி பகுதியில் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்து உயிருடன் புதையுண்ட பெண்ணின் சடலத்தை மீட்பு குழுவினர் இன்று மீட்டனர்.

பயிற்சி தாதியரான Mhey Yumol Jasmin என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் ஐந்து பேர்வரை காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு சிக்கிய 60 மற்றும் 70 வயதுகளுடைய இரு பெண்கள் மீட்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

எரிவாயு கசிவினால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் அது பற்றி விசாரணை தொடர்கின்றது.

Related Articles

Back to top button