சிட்னி தென்மேற்கு பகுதியில் நபரொருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பென்ரித் , யூனியன் சாலை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அவசர சேவை பிரிவினர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அழைக்கப்பட்டிருந்தனர்.
இருவர் புகுந்து நபரொருவரை தாக்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான 60 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இக்கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையும் ஆரம்பமாகியுள்ளது.