ஆல்பிரட் வெப்பமண்டல சூறாவளி கரையைக் கடந்திருந்தாலும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் அடை மழை பெய்துவருகின்றது.
சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளன.
அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளப்பெருக்கால் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணிநேரத்துக்கு 800 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அதேபோல ஆல்பிரட் சூறாவளியால் வடக்கு நியூ சவூத் வேல்ஸ் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.