Australiaநிகழ்வுகள்

சிட்னியில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு

சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கும் நடைபெற உள்ளது.

பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகியஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு சிட்னியில் உள்ள பெமுள்வே சமூக மண்டபத்தில் இடம்பெற உள்ளது. Allan G Ezzy Community Centre,(Near Woolworths) 1 Newport St, Pemulwuy, NSW.

எதிர்வரும் 7ம் திகதி ஜூன் 2024 வெள்ளிக்கிழமை மாலை 18.30 முதல் 21:00 வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் தலைமையுரையை எழுத்தாளர் மாத்தளை சோமு ஆற்றுவார். பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை திரு. தனபாலசிங்கம் நிகழ்த்துவார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை டாக்டர். ஹாரூன் காசிம் ஆற்றுவார்.

இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் சுந்தரதாஸ் ஆற்றுவார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில்
தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அத்துடன் திருநந்தகுமாரும் சிறப்புரை ஆற்றுவார்.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சிட்னியில் நடைபெறும் இந்நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவருடன் சந்திப்பும், நூல்கள் வெளியீடும் நடைபெற உள்ளது.

சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் நடைபெறும் நூல் வெளியீடும் இலக்கிய அரங்கின்
ஏற்புரையை ஐங்கரன் விக்கினேஸ்வரா நிகழ்த்துவார்.

Related Articles

Back to top button