ஆல்பிரட் சூறாவளியால் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தின் வட பகுதி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கர்ப்பிணி தாயொருவர் வீட்டிலேயே குழந்தை பிரசவித்துள்ளார்.
அனர்த்த எச்சரிக்கையால் துறைமுகத்துக்கு அருகிலுள்ள தமது வீட்டில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 7.45 மணியளவில் இரு தாதியர்களின் உதவியுடன் அவருக்கு வீட்டிலேயே பிரவசம் பார்க்கப்பட்டுள்ளது.
4 கிலோ எடையில் ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. குறித்த பெண் குழந்தைக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. எனினும், அவர் செல்லமாக ஆல்பி - (Alfie) என அழைக்கப்படுகின்றார்.
அதேவேளை, வெள்ளத்தில் சிக்கி காணாமல்போயுள்ள நியூ சவூத் வேல்ஸ் மாநில நபரை தேடும் பணி இடம்பெறுகின்றது.
ஆல்பிரட் சூறாவளி தாக்கம் குறைந்துள்ளபோதிலும் அடை மழை மற்றும் வெள்ளத்தால் தென்குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவூத் வேல்ஸ் பகுதிகளில் பெரும் அனர்த்தம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.