AustraliaCommunityMain News

ஆஸ்திரேலிய சிங்கி இறால்மீதான தடையை நீக்குமா சீனா?

சீன பிரதமர் ஆஸ்திரேலியா வரவுள்ள நிலையில், தமது உற்பத்தின் தொடர்பான ஏற்றுமதி தடை நீக்கும் என்று ஆஸ்திரேலிய சிங்கி இறால் உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சீன பிரதமர் நான்கு நாட்கள் பயணமாக நாளை ஆஸ்திரேலியா வருகின்றார்.

4 நாட்கள் இங்கு தங்கி இருக்கும் அவர், முக்கியத்துவமிக்க பல நிகழ்வுகளில் பங்கேற்கின்றார்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன பிரதமர் கன்பரா வருவது மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது.

சீன பிரதமருடனான சந்திப்பின்போது, ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைகள்மீதான சீனாவின் ஆபத்தான நடவடிக்கைகளுக்கு முற்றுபுள்ளி வைப்பது தொடர்பில் பேச்சு நடத்தப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பு திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு செய்தியாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button