AustraliaCommunity

சிட்னி தேவாலய வளாகத்தில் கலவரம்: மேலும் அறுவர் கைது!

சிட்னி தேவாலய வளாகத்தில் இடம்பெற்ற கலவர சம்பவம் தொடர்பில் மேலும் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிட்னி தேவாலயத்தில் பிஷப்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, தேவாலய வளாகத்தில் ஒன்று கூடியவர்களில் சிலரால் கலவரம் தூண்டப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸார்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இக்கலவரம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கினர். இதற்கு முன்னரும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் இதுவரை 29 பேர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button