AustraliaCommunity

சிட்னி பல்கலைக்கழகத்திலுள்ள பாலஸ்தீன முகாம்களை அகற்றுமாறு மீண்டும் உத்தரவு!

காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் போர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சிட்னி பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு போராட்டம் இரு மாதங்களாக தொடர்கின்றன.

இந்நிலையில் பாலஸ்தீன முகாம்களை அகற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆரம்பமான பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆஸ்திரேலியாவிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

சிட்னி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு முகாம்களை அகற்றுமாறு ஏற்கனவே நிர்வாகம் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்பாட்டாளர்கள் நிராகரித்தனர். இந்த பின்னணியிலேயே தற்போது மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button