மேற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மாநில தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ள லேபர் கட்சி, மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
பிரீமியர் ரோஜர் குக் தலைமையிலான மேற்கு ஆஸ்திரேலிய லேபர் கட்சி, 41 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. லிபரல் கட்சி ஐந்து இடங்களிலும், நெஷனல்ஸ் கட்சி 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
நிலையானதொரு ஆட்சியை நடத்துவதற்கு மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் பிரீமியர் ரோஜர் குக் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
மாநிலத்தில் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்திய மாநில தலைவர் ரோஜர் குக்குக்கு, பிரதமர் அந்தோனி அல்பானீஸி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.