AustraliaCommunityNew South Wales, Queensland

பெண் சுட்டுக்கொலை: சந்தேகநபர் தப்பியோட்டம்! அவசரநிலை பிரகடனம்!!

குயின்ஸ்லாந்தின் மேக்கேயின் கடலோர புறநகர் பகுதியில் தெற்கு மாக்கோ ராப் பிளேசில் இன்று மாலை நடத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிதாரி தப்பியோடிய நிலையில் தெற்கு மாக்கோவில் அவசரநிலையை பொலிசார் அறிவித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு சட்டத்தின்படி ((Public Safety Preservation Act ) அவசர அறிவிப்பை வெளியிட்ட பொலிஸார், மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மக்களிடம் கோரியுள்ளனர்.

மாலை 5.20 மணியளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது,

மேலும் ராப் பிளேஸ், பாரடைஸ் தெரு, ஆர்க்கிபால்ட் தெரு, கிண்டர்மார் தெரு மற்றும் டென்டன் தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசங்களில் அவசரநிலை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-சபா.தயாபரன்-

Related Articles

Back to top button