AustraliaCommunity

ஆஸி. பாதுகாப்பு கட்டமைப்புக்குள் அதிநவீன ட்ரோன்கள் இணைப்பு!

ஐரோப்பிய போர் களத்தில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ள “Switchblade 300” ட்ரோன் வகையை தமது நாட்டு படைகளுக்காக ஆஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ளது.

வெடிபொருட்களை சுமந்து செல்லக்கூடிய குறித்த ட்ரோன் வகையை அமெரிக்க நிறுவனமொன்று உற்பத்தி செய்துள்ளது.

ரஷ்ய போரில் உக்ரைன் படைகளால் தற்போது Switchblade 300 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

குறித்த ட்ரோன் வகை சுமார் 10 கிலோ மீற்றர் தூரம்வரை இலக்கை நோக்கி பயணிக்க கூடியது.

உலக பாதுகாப்பு கட்டமைப்பில் ட்ரோன்கள் மிக முக்கியமானவையாக மாறியுள்ளன. தாக்குதல்களுக்குகூட இவை பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையிலேயே தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையின் ஓரங்கமாக ட்ரோன்களை ஆஸ்திரேலியா கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.

 

Related Articles

Back to top button