AustraliaCommunity

சமூக ஒற்றுமைக்காக சிறப்பு தூதுவர் நியமனம்!

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில், மதவெறித் தடுப்புக்கான சிறப்பு தூதுவரை லேபர் அரசு நியமித்துள்ளது.

யூத சட்டத்தரணியும், வணிகத் தலைவருமான Jillian Segal என்பவரையே பிரதமர், சிறப்பு தூதுவராக நியமித்துள்ளார். மூன்றாண்டுகள் அவர் அப்பதவியில் தொடர்வார்.

இந்த நியமனம் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் என பிரதமர் Anthony Albanese நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“ மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் ஆஸ்திரேலியாவில் வாழும் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு மோதலை இங்கு கொண்டுவருவதை நாம் விரும்பவில்லை.” – எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

யூத எதிர்ப்பு பிரச்சினை தொடர்பில் பிரதமர் மற்றும் பன்முக கலாசார அமைச்சருக்கு சிறப்பு தூதுவர் Jillian Segal ஆலோசனை வழங்குவார். மேலும் கல்வி சார்ந்த நடவடிக்கையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்.

அதேவேளை, Islamophobia
தொடர்பிலும் விரைவில் அரசு சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கும் எனவும் பிரதமர் Anthony Albanese அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button